1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Local elections Symbol allotment for Dinakaran

உள்ளாட்சி தேர்தல்: தினகரனின் அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு!

தினகரன் அமமுக
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர்  9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய கடைசி தினம் செப்டம்பர் 22 என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23 என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 என்றும், அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில்  தினகரன் தலைமையிலான அமமுக போட்டியிட உள்ளது. எனவே அக்கட்சிக்குத் தேர்தல் ஆணையம்  குக்கர் சின்னம்   ஒதுக்கியுள்ளது. 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
ஏமாற்றி பணம் பறித்த....சினிமா உதவி இயக்குநர் கைது