ரசிகர்கள் திட்டும்போது வலித்தது..இப்போது......தனுஷ் பட நடிகர் டுவீட்

Sinoj| Last Updated: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (22:17 IST)


ரசிகர்கள் திட்டும்போது வலித்தாலும் பாராட்டும்போது மகிழ்ச்சியாக உள்ளதாக தனுஷ் பட நடிகர் தெரிவித்துள்ளார்.


தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் தனுஷை அடுத்து அனைவரின் கவனத்தை பெற்றது நட்டி நடராஜ் என்பது குறிப்பிடத்தக்கது

அவருடைய அபாரமான நடிப்பு, குறிப்பாக அவர் போலீஸ் ஸ்டேஷனில் செய்யும் அட்டகாசமான நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவரது நடிப்பை உண்மை என நினைத்துக்கொண்டு தனுசை அவர் கொடுமைப்படுத்தியதாக பலர் தனுஷ் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். சமீபத்தில், அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் ஒரு
வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளில் அவர் கூறியிருப்பதாவது:

என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி. எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் பெரும் வசூல் வாரிக் குவித்துள்ள கர்ணன் படத்தில் தனுஷ் போன்று நடிகர் நட்டுவும் நடிப்பில் சூப்பராக நடித்திருப்பதாகப் பாராட்டுகள் குவிந்துவருகிறது.

இதுகுறித்து நடிகர் நட்டி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ரசிகர்கள் திட்டும்போது.. மனது வருத்தமுற்றது.. இன்று பாராட்டுகள் நிறையும்போது மனது சந்தோஷமடைகின்றது..நன்றி ரசிகர்களே..(நட்டி)love you all..:)) எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :