மும்பை அணிக்கு எதிராக நடராஜன் களமிறங்காதது ஏன்? – விவிஎஸ் லஷ்மண் விளக்கம்!

சிட்னியை சுற்றிப்பார்க்கும் நடராஜன்: வைரலாகும் புகைப்படம்!
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (15:24 IST)
நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சன்ரைஸர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் நடராஜன் களமிறங்காதது குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் விளக்கம் அளித்துள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய சன்ரைஸர்ஸ் அணி 137 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.

இதுகுறித்து பேசியுள்ள சன்ரைஸர்ஸ் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லக்‌ஷ்மண் ”ஆரம்பத்தில் சன்ரைஸர்ஸ் அணியின் கையில் ஆட்டம் இருந்தது. ஆனால் 10 ஓவர் தாண்டிய பிறகு நிலைமை மாறிவிட்டது. சென்னை போன்ற பிட்சுகளி பந்து மெதுவாக மூவ் ஆகிறது. இதற்கு வீரர்கள் பழகி டாட் பால்களிலும் ஒரு ரன்னாவது எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் சென்ற ஆட்டத்தில் நடராஜன் விளையாடாதது குறித்து பேசிய அவர் நடராஜன் காலில் சிறுவீக்கம் இருப்பதால் அது மேலும் பெரிதாகி விடாமல் இருக்கு அவர் விளையாடவில்லை என்றும், விரைவில் விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :