செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:15 IST)

ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகல்… அதிர்ச்சி தகவல்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐபிஎல் 2021 தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

சன் ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த யார்க்கர் கிங் நடராஜன் சிறப்பாக பந்து வீசியதால் இந்திய அணியில் இடம்பெற்று கலக்கினார். அதையடுத்து இந்த ஆண்டு அவர் மேல் எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயமே காரணம் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது தொடரில் இருந்து முழுவதுமாக அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்காக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு செல்ல உள்ளார்.