செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நாட்டு கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!

நாட்டு கோழி முட்டையில் புரதச்சத்து அதிகமுள்ளதால் அதை தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு புரத சத்து குறைபாடு நீங்கி கண்கள் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் ஏற்படாமல் காக்கிறது. 
 

நாட்டு கோழி முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும். எலும்புகள் உடைந்து வைத்தியம் மேற்கொண்டு வருபவர்கள் நாட்டு முட்டையை  சாப்பிட்டு வந்தால் உடைந்த எலும்புகள் சீக்கிரத்திலேயே கூடும். உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஓய்வில் இருப்பவர்களுக்கு நாட்டு கோழி முட்டை சிறந்த நோய் கால உணவாக இருக்கிறது. 
 
நாட்டு கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது. எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்  நாட்டு முட்டையை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம். 
 
நாட்டு கோழி முட்டை ஆண்களின் தளர்ந்து போயிருக்கும் நரம்புகளை முருகேற்றி நரம்பு தளர்ச்சியை போக்கும். உடலுறவு சார்ந்த பிரச்சனைகளை போக்கும். மலட்டு தன்மையையும் நீக்கி ஆரோக்கியமான குழந்தை பெற உதவும். 
 
நாட்டு கோழி முட்டையில் மெலனின் புரத சத்து அதிகம் உள்ளது. அடிக்கடி நாட்டு முட்டை சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி மற்றும் நகங்கள்  ஆரோக்கியமாக இருக்கும்.
 
நாட்டு கோழி முட்டை கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான சத்துக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இம்முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டங்களை அளிக்கிறது.