வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2024 (08:38 IST)

எந்த இயக்குனராவது இப்படி பண்ணுவாரா? சுகுமாரை மேடையிலேயே புகழ்ந்த அல்லு அர்ஜுன்!

புஷ்பா முதல் பாகத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தின் வணிக மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்  சென்னையில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன் “என் முதல் படம் முடிந்த பின்னர் எனக்கு ஒரு ஆண்டு எந்த படமும் வரவில்லை. நான் சும்மாதான் இருந்தேன். அப்போதுதான் ஒருவர் ஒரு கதையோடு வந்தார். அதுதான் சுகுமார் சார். ஆர்யா என்றொரு படம் பண்ணினோம். அதன் பின்னால் நான் பின்னால் திரும்பி பார்க்கவே இல்லை. முன்னோக்கி சென்று கொண்டே இருந்தேன்.

எந்த இயக்குனராவது இப்படி ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நின்று பேசும் வாய்ப்பை நழுவ விடுவார்களா?. ஆனால் சுகுமார் சார் தற்போது கூட இங்கு வராமல் படத்தின் எடிட்டிங் வேலைகளில் இருக்கிறார். ஐ லவ் யூ சுக்கு சார்” என பாராட்டி பேசியுள்ளார். படப்பிடிப்பின் போது அல்லு அர்ஜுனுக்கும் சுகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து ஷூட்டிங் பாதிகக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.