எனக்கான வேண்டி கொண்டவர்களுக்கு நன்றி! – மருத்துவமனையில் நடராஜன்!

Natarajan
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (14:52 IST)
ஐபிஎல்லில் விளையாடி வந்த தமிழக கிரிக்கெ வீரர் நடராஜனுக்கு காலில் அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக இளம் கிரிக்கெட் வீரரான நடராஜன் டி.என்.பி.எல் போட்டிகள் மூலம் கவனம் பெற்று ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்று பயண ஆட்டத்தியில் இந்திய அணியிலும் இடம்பெற்று இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட இருந்த நடராஜனுக்கு கால் மூட்டில் பிசகு ஏற்பட்டதால் ஐபிஎல்லில் விளையாடவில்லை. இந்நிலையில் மருத்துவமனையில் அன்மதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் மருத்துவமனையில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தனக்காக வேண்டிக் கொண்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :