ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 மே 2022 (19:16 IST)

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவிட்ட நடிகை கைது

Ketaki Chitale
மஹாராஷ்டிர மாநில தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை விமர்சித்த நடிகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
மஹாராஷ்டிராவில் பிரபல நடிகை கேத்தகி சித்தலே. இவர் முன்னாள் மத்திய  அமைச்சரும், தேசியவாத காங்கிரச் கட்சி தலைவருமான சரத்பவார்(81) குறித்து, தனது சமூக வலைதளத்தில், நீங்கள் பிராமணவர்களை வெறுக்கிறீர்கள்..உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது.. என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.
 
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடிகைக்கு எதிராகப்புகார் அளித்தனர். 
 
எனவே இணையவழி குற்றத் தடுப்புபிரிவு போலீஸார் நடிகை கேத்தகி சித்தலே மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு  செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், எனவே அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று நீதிமன்றம் உத்தரவ்விட்டது. 
 
போலிஸார் காவல்  நேற்று முடிந்ததை அடுத்து, அவரை போலீஸார் கோர்டில் ஆஜர்படுத்தினர்.
 
வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து,  நடிகை கேத்தகி  சித்தலேவை சிறையில் அடைக்கப்பட்டார்.  நடிகை சார்பில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.