வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (22:38 IST)

1000 போலீஸாரை அலையவிட்ட இளம்பெண் !

தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக கூறி புகார் அளித்துள்ள 19 வயதாகும் இளம் பெண் அங்குள்ள போலீஸாரை அலையவிட்டுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வசித்து வரும் இளம் பெண்( 19 ) நேற்று காலை காலம்னா என்ற பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். அதில், தான் இசை வகுப்புக்குச் சென்று கொண்டிக்கும்போது,  வேனில் வந்த இரண்டு பேர் தன்னை சிக்ஹலி பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்.

இதையடுத்து சுமார் 1000 போலீஸார் அடங்கிய 40 குழுக்கள் இஅபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, இளம்பெண் கூறிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அப்பெண் ஆட்டோவைப் பிடித்து வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றது தெரியவந்தது. பின்னர் அப்பெண் பொய்புகார் அளித்ததைக் கண்டுபிடித்தனர் போலீசார்.