செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By J.Durai
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (10:10 IST)

மாநில அளவிலான காலடி குத்து வரிசை சாம்பியன்ஷிப் சிலம்பாட்டம் லீக் போட்டி!

சென்னை அடையாறில் அமைந்துள்ள இளைஞர் விடுதியில் உலகத் தமிழ் பாரம்பரிய காலடி குத்து வரிசை விளையாட்டு சங்கம் மற்றும் உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கமும் இணைந்து மாநில அளவிலான காலடி குத்து வரிசை சாம்பியன்ஷிப் சிலம்பாட்டம் லீக் போட்டி நடைபெற்றது.
 
இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
2014 -ஆம் ஆண்டு முதல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நடத்தும் முதல் போட்டியாகும்.
 
இப் போட்டியானது  மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்க தலைவர் கண்ணன் பேசியதாவது......
 
தமிழக அரசு சிலம்பம்  விளையாட்டை அங்கீகரித்தது போல் இந்த காலடி குத்து வரிசை விளையாட்டையும் அங்கீகரிக்க வேண்டும்.
 
தேசிய அளவில் இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந் நிகழ்வின் போது உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்க துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் அருண், பொருளாளர் ஆருண், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள சிலம்பாட்ட ஆசன்கள் பல பேர் கலந்து கொண்டனர்.