1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (08:43 IST)

தங்கத்தை தவறவிட்ட இந்திய ஹாக்கி அணி! வெண்கல பதக்கமாவது கிடைக்குமா?

Indian Hockey Team

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய ஹாக்கி அணி ஜெர்மனியிடம் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவியது.

 

 

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலரும் விளையாடி வரும் நிலையில் இதுவரை இந்தியா ஒரு தங்கப்பதக்கம் கூட வெல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

 

இந்நிலையில் அரையிறுதி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராடி அதிர்ச்சி தோல்வியை அடைந்தது. இதனால் இந்தியாவின் தங்கப்பதக்கம் வெல்லும் மேலும் ஒரு வாய்ப்பும் நிறைவேறாமல் போனது. ஆனால் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய அணி மூன்றாவது இடமான வெண்கல பதக்கத்திற்கு நாளை மாலை 5.30 மணி ஸ்பெயின் ஹாக்கி அணியுடன் மோத உள்ளது.

 

இந்த போட்டியில் வென்றால் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வெல்ல வாய்ப்புகள் உள்ளதால், இந்திய அணிக்கு வெண்கல பதக்கமாவது கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்திய ஹாக்கி அணி அரையிறுதி வரை போராடியதை பாராட்டியுள்ள நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தொடர்ந்து சிறப்பாக விளையாட வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K