வியாழன், 30 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (17:12 IST)

மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி..! அரையிறுதிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத்..!!

Vinesh Phogat
பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.  இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது. 

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் நடந்த ரவுன்ட் ஆப் 16 சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை சுசய் யுய்  எதிர்கொண்டார். 
 
தடுப்பு ஆட்டத்தில் விளையாடிய வினேஷ் போகத் அடுத்தடுத்து இரண்டு புள்ளிகளை இழந்து பின்தங்கினார். இதனால் தனது கிடுக்குபிடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகத் ஜப்பான் வீராங்கனையை கலங்கடித்தார். இறுதியில் ஜப்பான் வீராங்கனையை 3-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு வினேஷ் போகத் தகுதி பெற்றார். 
 
தொடர்ந்து இதே எடைப் பிரிவில் கால் இறுதி ஆட்டத்தில் உக்ரைனை சேர்ந்த ஒக்ஸானா லிவாச் என்பவரை எதிர்கொண்டார். இந்த முறை தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த வினேஷ் போகத், உக்ரைன் வீராங்கனைக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
 
Wrestiling
இதனால் போட்டி 3-க்கு 0 என்ற கணக்கில் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்தது. இதனிடையே தடுப்பு ஆட்டத்தில் விளையாடி வந்த உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் தனது சீரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால்  ஆட்டத்தில் சுவாரஸ்யம் தொற்றுக் கொண்டது.


இறுதியில் உக்ரைன் வீராங்கனையை 7-க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு மகளிர் மல்யுத்தத்தில் பதக்கம் உறுதியாகி உள்ளது.