1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (21:30 IST)

ரோஹித் சர்மா அபார அரைசதம்: 29 ரன்கள் மட்டுமே பின் தங்கிய இந்தியா!

ரோஹித் சர்மா அபார அரைசதம்: 29 ரன்கள் மட்டுமே பின் தங்கிய இந்தியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார்
 
63 பந்துகளில் 50 ரன்கள் அடித்து உள்ள ரோகித் சர்மா அதில் 8 பவுண்டரி அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தபோதிலும் ரோகித் சர்மா நிலைத்து ஆடி வருகிறார் என்பதும் அவருக்கு உறுதுணையாக கேப்டன் விராட் கோலி 19 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் இந்திய அணி 26 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் தற்போது இந்தியா 29 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது