1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 10 ஜனவரி 2025 (18:06 IST)

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இன்று இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் கேப்டன் கேபி  அபாரமாக விளையாடி 92 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பிரியா மிஸ்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீப்தி சர்மா சாயாலி மற்றும் டைட்டஸ் சாது ஆகியோர்கள் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.
 
இந்த நிலையில், 239 என்ற இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணியினர் விளையாடிய போது, தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக தேஜால் விளையாடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
 
இந்திய மகளிர் அணி 34.3 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து 89 ரன்கள் எடுத்த பிரதிகா ராவல் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி ஜனவரி 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran