செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (15:50 IST)

இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம்… இரண்டு விக்கெட்களை இழந்த இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்துள்ளது.

குஜராத் கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான படேல் கிரிக்கெட் மைதானம் இருந்த பகுதி விரிவுப்படுத்தப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டப்பட்டுள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இதையடுத்து பந்துவீசிய இந்திய அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இஷாந்த் சர்மா மற்றும் அக்ஸர் படேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.