105 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கள்: இந்திய பந்துவீச்சுக்கு இங்கிலாந்து திணறல்

105 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கள்: இந்திய பந்துவீச்சுக்கு இங்கிலாந்து திணறல்
siva| Last Updated: புதன், 24 பிப்ரவரி 2021 (18:07 IST)
105 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கள்: இந்திய பந்துவீச்சுக்கு இங்கிலாந்து திணறல்
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று புதிதாக திறக்கப்பட்ட அகமதாபாத் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் சற்று முன் வரை இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது

இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறி வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர் கிராலி மட்டும் 53 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவைச் சேர்ந்த அக்சர் படேல் 4 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்கள். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் என்பதும், இஷாந்த் ஷர்மாக்கு இன்றைய போட்டி 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :