செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (19:20 IST)

இங்கிலாந்து 112 ரன்களில் சுருண்டது: 50 ஆண்டுகளில் 6-வது முறை

இங்கிலாந்து 112 ரன்களில் சுருண்டது: 50 ஆண்டுகளில் 6-வது முறை
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத் புதிய மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது 
 
48.4 ஓவர்களில் 112 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து எடுத்துள்ளது என்பதும் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கடந்த 50 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதல் இன்னிங்சில் 50 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தது இது ஆறாவது முறையாகும். இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 85 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கிய நிலையில் ஐந்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஐந்து ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா மற்றும் கில் பேட்டிங் செய்து வருகின்றனர்.