செவ்வாய், 13 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (13:08 IST)

உலகின் பிரம்மாண்ட மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட்! – சொந்த மண்ணில் வெல்லுமா இந்தியா!

உலகின் பிரம்மாண்ட மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட்! – சொந்த மண்ணில் வெல்லுமா இந்தியா!
இந்திய – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் இன்று சர்தார் படேல் ஸ்டேடியத்தில் தொடங்க உள்ள நிலையில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முன்னதாக நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.

குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகில் பிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் படேல் மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. மொட்டேரா மைதானத்தில் முதன்முறையாக நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற ஆவல் அதிகரித்துள்ள நிலையில் பிற்பகல் 2.30 மணி அளவில் போட்டி தொடங்க உள்ளது.