ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (11:00 IST)

ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை… ஏன் தெரியுமா?

போலந்து நாட்டைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா ஆண்ட்ரிஜெர்க்கின் தன்னுடைய வெள்ளி பதக்கத்தை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் போலந்து நாட்டைச் சேர்ந்த மரியா ஆண்ட்ரிஜெர்க்கின். இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவனின் இதய சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவரின் தாய் நிதி திரட்ட முயன்று தோல்வி அடைந்ததை அடுத்து தன் பதக்கத்தை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார்.

அதன் மூலம் கிடைக்கும் தொகையை அந்த சிறுவனின் சிகிச்சைக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்.