சாதிக்க இருந்த நேரம் தடையாய் வந்த தலீபான்கள்! – ஆப்கன் வீராங்கனை கண்ணீர்!
தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் பாரா ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள இருந்த ஆப்கன் வீராங்கனை கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த இரு வீராங்கனைகள் தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதால் அவ்வீராங்கனைகள் விளையாட செல்ல தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் ஆப்கன் வீராங்கனை ஜாகியா குடாதடி என்பவர் காபூலில் இருந்து தப்ப முயன்று பிறகு தனக்கு உதவுமாறு வீடியோ வெளியிட்டுள்ளார். பாரா ஒலிம்பிக்ஸில் ஆப்கானிஸ்தானை பிரநிதித்துவப்படுத்தும் முதல் வீராங்கனை ஜாகியா என்பது குறிப்பிடத்தக்கது.