1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (19:27 IST)

33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம்

2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்க விருதுகள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
ஆம், சுதந்திர தினத்தையொட்டி 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்க விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறையில் 9, காவல்துறையில் 3, தீயணைப்புத்துறையில் 3 பேருக்கு முதல்வர் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. 
 
நகராட்சி நிர்வாகத்துறையில் 6, வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறையில் 3, கூட்டுறவு துறையில் 3, ஊராட்சித்துறையில் 6 பேருக்கும் முதல்வர் சிறப்பு பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.