1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 ஜூன் 2022 (18:08 IST)

ரஞ்சி கோப்பை: முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மத்தியப் பிரதேசம்

ranjit
ரஞ்சி கோப்பை: முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மத்தியப் பிரதேசம்
கடந்த சில நாட்களாக ரஞ்சி கோப்பை தொடர் நடைபெற்று வந்த நிலையில் இறுதி போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக மத்திய பிரதேசம் கோப்பையை வென்றுள்ளது. இதனையடுத்து அந்த அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
ஜூன் 22ஆம் தேதி பெங்களூருவில் ரஞ்சித் கோப்பை இறுதிப் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 269 ரன்கள் எடுத்தன 
 
இந்த நிலையில் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் அறிவித்து 536 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 108 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிது.
 
அந்த அணி 108 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. முதல் முறையாக மத்திய பிரதேச அணி ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது