ஹீரோவாகும் மற்றொரு நகைச்சுவை நடிகர்…. முனீஸ்காந்த் நடிப்பில் உருவாகும் புதிய படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஒருவர் நடிகர் முனீஸ்காந்த்.
முண்டாசுப்பட்டி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த முனீஸ்காந்த், அடுத்து மாநகரம் படத்திலும் கலக்கினார். தொடர்ந்து பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் வடிவேலு, சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு வரிசையில் இவரும் கதாநாயகன் ஆக உள்ளாராம்.
இவர் நடிக்க உள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை விஜயலட்சுமியும் நடிக்க உள்ளாராம். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.