ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (14:49 IST)

இந்தியாவின் ஸ்கோர் குறைய இதுதான் காரணமா ? கோலி செய்த தவறு !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி 179 ரன்களை சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. இதனையடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையே 2வது  டி20 போட்டி கடந்த 26 நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இதனையடுத்து இன்று மூன்றாவது டி 20 போட்டி , ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.து. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி  கேப்டன் வில்லியன்சன்  பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட்  இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 65, விராட் கோலி 38, ராகுல் 27 ரன்கள் எடுத்தனர். 

பவர்ப்ளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 70 ரன்களை சேர்த்திருந்தது. அதனால் ஸ்கோர் 200 முதல் 220 வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் விக்கெட் விழுந்ததும் கோலி இறங்காமல் ஷிவம் துபேவை இறக்கினார். அவர் அதிரடியாக ஆடமுடியாமல் தடுமாற அழுத்தம் அதிகமான ரோஹித் ஷர்மா கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு இந்திய அணியினரால் அதிரடியாக ஆடமுடியவில்லை.

வழக்கம் போல கோலி மூன்றாவதாக இறங்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும் என ரசிகர்களும் வர்ணனையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.