திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 29 ஜனவரி 2020 (15:46 IST)

சச்சினுக்கு பிறகு புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா !

கிரிக்கெட் கடவுளாகப் பார்க்கப்படுவர் முன்னாள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது அபாரமாக பேட்டிங் திறன் இந்திய அணிக்கு பல வெற்றிகளையும், அவருக்கு உலக அளவில் பெரும் புகழையும் சேர்த்துள்ளது. இந்த நிலையில், சச்சினுக்குப் பிறகு அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித் சர்மா.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் ரோஹித் சர்மா. இவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான் இன்றைய 3 வது டி - 20 போட்டியில் தனது 20 அரைசதத்தை கடந்தார்.
 
மேலும், டெண்டுல்கருக்கு பிறகு அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த தொடக்க ஆட்டக் காரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
 
கிரிக்கெட் ஜாம்பாவான்கள் மற்றும் ரசிகர்கள் ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.