இந்தியா அசத்தல் பேட்டிங்... நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு !

cricket
sinoj kiyan| Last Updated: புதன், 29 ஜனவரி 2020 (16:02 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. இதனையடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையே 2வது  டி20 போட்டி கடந்த 26 நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இதனையடுத்து இன்று மூன்றாவது டி 20 போட்டி , ஹாமில்டனில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி  கேப்டன் வில்லியன்சன்  பந்து வீச்சை தேர்வு செய்தார்.
 
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட்  இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 65, விராட் கோலி 38, ராகுல் 27 ரன்கள் எடுத்தனர். 

அடுத்து களமிறங்கவுள்ள நியூசிலாந்து அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடவுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற டி 20 போட்டியில் இந்திய அணி வென்றது போல 3  வது போட்டியில் வெல்லுமான என இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :