திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (06:39 IST)

ஊக்கமருந்து பிரச்சனை: முடிவுக்கு வந்த இந்திய வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கை

ஊக்கமருந்து பிரச்சனையால் பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கையே பறிப்போகியுள்ள நிலையில் இதே பிரச்சனை காரணமாக இந்திய தடகள வீராங்கனை பிரியங்கா என்பவருக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
 
29 வயதான இந்திய தடகள வீராங்கனையான பிரியங்கா கடந்த 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு இவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தியது
 
இந்த விசாரணையின் முடிவில் பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி இவர் தன் வாழ்நாளில் தடகள விளையாட்டில் விளையாட வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.