திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (15:20 IST)

டெங்கு காய்ச்சலால் பிரியங்கா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 

 
இந்தியாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லி மருத்துவமனையில் மட்டும் 657 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மட்டும் 325 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 23ஆம் தேதி இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.