செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (16:12 IST)

துப்பட்டாவில் தேசியக்கொடி - சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகர் பிரியங்கா சோப்ரா இந்திய தேசிய கொடியின் நிறத்தில் துப்பட்டா அணிந்து வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.


 

 
பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் சென்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த சில வருடங்களாக அவர் வெளிநாட்டிலேயே இருக்கிறார். அவர் நடித்த பே வாட்ச் என்கிற ஆங்கில படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
 
இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை குறிப்பிடும் வகையில், தேசியக் கொடியின் நிறத்தில் அமைந்த ஒரு துப்பட்டாவை தனது கழுத்தில் அணிந்தபடி ஒரு புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
இதைக்கண்ட பலரும் அவர் தேசியக்கொடியை அவமதித்து விட்டார் எனவும், சுதந்திர தினத்தன்று ஒரு சேலை அணியக்கூடாத? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு பக்கம் சிலர் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.