திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (12:11 IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்திய துடுப்பு படகு அணி வீரர்கள் தங்கம் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற  துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. 
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 
 
பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர்கள் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி,  12 வெண்கலம் வென்றிருந்தனர்.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற துடுப்பு படகு போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெற்ற வார்ன் சிங், போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் இந்தோனேசிய அணியை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 தங்கம், 4 வெள்ளி,  12 வெண்கலம் என மொத்தம்  21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.