திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (12:52 IST)

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மகாராஷ்டிரா உதவி கலெக்டர்

ஆசிய விளையாட்டு போட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உதவி கலெக்டராக பணிபுரியும் வீராங்கனை ஒருவர் தங்கம் பெற்று சரித்திர சாதனையை செய்துள்ளார். 
 
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் என்பவர் அந்த மாநிலத்தில் உதவி கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே உலக போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்ற ராஹி இன்று நடந்த பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார் இந்த பிரிவில் தாய்லாந்தின் நபஸ்வான் யாங்பைபூன் வெள்ளிப்பதக்கமும், தென்கொரியாவின் கிம் மின்ஜங்குக்கு  வெண்கலப்பதக்கமும் கிடைத்தது.
 
ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. தங்கம் வென்ற ராஹி மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் பிறந்தவர். 27 வயதான ராஹிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவருக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
 
தங்கம் வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஹி, 'எனது பயிற்சியாளர் முங்பயார் டோர்ஜ்சுரென் இல்லை என்றால் இந்த வெற்றி சாத்தியமில்லை. எங்கள் இருவரின் உறவு தாய்-மகள் போன்றது. அவருக்கும் கிட்டத்தட்ட எனது வயதில் மகள் இருக்கிறார். ஓராண்டாக நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்