வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (16:41 IST)

துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டுயில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

 
18வது ஆசிய விளையாடுப் போட்டிகள் இந்தோனேஷியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து அசத்தி வருகின்றனர். 
 
65 கிலோ எடை பிரிவினருக்கான மல்யுத்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார். இந்நிலையில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 586 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
 
இது இந்தியாவிற்கு கிடைத்த மூன்றாவது தங்கப்பதங்கமாகும். இப்போட்டியில் சவுரப் சவுத்ரி 240.7 புள்ளிகள் எடுத்து புதிய சாதனையும் படைத்துள்ளார்.