1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (11:34 IST)

ஆசிய விளையாட்டு போட்டி : பெண்கள் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற வினேஷ் போகத்

ஆசிய விளையாட்டு பெண்கள் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்துள்ளார்.

 
தற்போது 18வது ஆசிய விளையாடு போட்டி நடைபெற்று வருகிறது.  போட்டியின் 2வது நாளான நேற்று பெண்கள் மல்யுத்தத்தில் (50 கிலோ, பிரிஸ்டைல் பிரிவு) இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தனது முதல் சுற்றில் 8-2 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் யனன் சன்னை தோற்கடித்து தங்க பதக்கத்தை பெற்றார். இதன் மூலம், ரியோ ஒலிம்பிக் கால் இறுதியில் அவரிடம் அடைந்த தோல்விக்கு வினேஷ் போகத் பலி தீர்த்துக்கொண்டார்.
 
அதேபோல், 65 கிலோ எடை பிரிவினருக்கான மல்யுத்த இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை எதிர்கொண்டார். கடுமையாக முயற்சி செய்து பஜ்ரங் ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.  ஆசியக் கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். 
 
இவர்கள் இருவருக்கும் பிரதமர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.