வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 22 ஆகஸ்ட் 2018 (16:13 IST)

203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

இந்திய இங்கிலாந்து இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி 3 வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. 
 
முதல் இன்னிங்சில் இந்தியா 323 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. 168 ரன் முன்னிலையுடன் 2 வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 
 
இதன்மூலம் இங்கிலாந்துக்கு 521 ரன் நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 311 ரன் எடுத்து இருந்தது. 
 
இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், ஒரு விக்கெட்டை கைப்பற்றி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.