வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (14:42 IST)

இந்திய அணியில் அதிரடி மாற்றம்: முரளிவிஜய், குல்தீப் நீக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்திய அணி தற்போது 1-2 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது
 
இந்த நிலையில் 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டிகளுக்கான அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். முரளி விஜய் முதல் டெஸ்ட் போட்டியில் 20 மற்றும் 6 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 
 
அதேபோல் குல்தீப் யாதவ் எதிர்பார்த்தபடி விக்கெட்டுக்களை வீழ்த்தாததால் அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது