தொடர்புடைய செய்திகள்
- தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?
- முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்ஷன்தான் செம்ம!
- இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!
- ‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!
- யாருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பது என்பதில் குழப்பம் வரும்… தன் அணி குறித்து பெருமிதப்பட்ட கில்!
சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்… மிட்செல் ஸ்டார்க் அபாரம்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 32 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 188 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடுவதும், சீரான் இடைவெளியில் விக்கெட்களை இழப்பதுமாக இருந்ததால், போட்டி கடைசி வரை எந்த பக்கமும் சாயாமல் விறுவிறுப்பாக சென்றது. இப்படி சென்ற போட்டியில் கடைசி ஒரு பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ரன்கள் தேவைப்பட, ஒரு ரன் மட்டும் சேர்த்து இரண்டாவது ரன் எடுக்கும் போது ரன் அவுட் ஆனார் துருவ் ஜுரெல். இதனால் போட்டி சமனில் முடிய சூப்பர் ஓவர் விளையாடப்பட்டது.
இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 பந்துகளில் 11 ரன்களை எடுத்து 2 விக்கெட்களை இழந்தது. டெல்லி அணி பவுலர் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி, ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட்களை அடிக்க முடியாமல் கட்டுப்படுத்தினார். இதன் பின்னர் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நான்கு பந்துகளில் அந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மிகச்சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.