1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (13:36 IST)

இன்று இந்தியா, மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி: முதல் வெற்றி யாருக்கு?

ind vs wi
இன்று இந்தியா, மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி: முதல் வெற்றி யாருக்கு?
இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இன்று இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது 
 
போர்ட் ஆப் ஸ்பெயின் என்ற இடத்தில் நடைபெறவிருக்கும் இன்றைய போட்டியில் இரு அணிகளும் முதல் போட்டியை வெல்ல தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது 
இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இந்த பயணத்தையும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகரமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்றைய போட்டியில் ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது