புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (11:20 IST)

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்! - விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை!

Flight
இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல முக்கியமான நகரங்களில் விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச விமான தளங்கள் தவிர்த்து பல உள்நாட்டு விமான நிலையங்களும் செயல்பட்டு வரும் நிலையில், பலர் உடனடி பயணங்களுக்கு விமானத்தையே நம்பி உள்ளனர்.
 
இந்நிலையில் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் விமான நிலையத்தில் செக் இன் பகுதியில் பயணிப்பதற்கான போர்டிங் பாஸை பெறுகின்றனர். ஆனால் போர்டிங் பாஸ் பெறுவதற்கு பல விமான நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 
இது மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில் அனைத்து விமான நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சகம், விமான நிலையங்களில் செக் இன் கவுண்டர்களில் வழங்கப்படும் போர்டிங் பாஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என எச்சரித்துள்ளது.