செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2022 (10:46 IST)

“ரிஷப் பண்ட் அதை மட்டும் செய்தால் நல்லா சம்பாதிக்கலாம்…” சோயப் அக்தர் கருத்து!

'
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பற்றி தன்னுடைய யுடியூப் சேனலில் பேசியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர்.


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே  சமீபத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி 75 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 125 ரன்கள் சேர்த்து தனது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் சதத்தை பதிவு செய்தார்.

வரிசையாக இக்கட்டான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் பண்ட் பற்றி பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தன்னுடைய யுடியூப் சேனலில் பேசியுள்ளார். பண்ட்டின் திறமைகளைப் பாராட்டியுள்ள அவர் “பண்ட் கொஞ்சம் உடல் எடையைக் குறைக்கவேண்டும். அப்படி குறைத்தால் அவர் அழகாக இருப்பதால் மாடல் ஆகலாம். அப்படி மாடல் ஆகிவிட்டால் அவர் மீது முதலீடுகள் குவியும். இந்தியாவில் மிகப்பெரிய சந்தை உள்ளது. அதன் மூலம் அவர் அதிகமாக சம்பாதிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.