1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (09:32 IST)

ஒரே நாளில் 21 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள்! - இந்தியாவில் கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று தினசரி பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் நிலவி வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து மக்களை காக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
 
அதன்படி இன்று 21,880 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,38,47,065 ஆக உயர்ந்துள்ளது. 60 பேர் இன்று உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,25,930 ஆக உள்ளது. இதுவரை 4,31,71,653 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,49,482 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.