1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 31 மார்ச் 2025 (10:30 IST)

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 23 வயது வீரரான ரியான் பராக் தனது திறமையான அல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் அவர் இருந்தார். அவர் 577 ரன்கள் சேர்த்துள்ளார். இதனால் அவர் மேல் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட்டு வரும் நிலையில், அந்த போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுகிறார். இந்நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அவர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்ததும் ரசிகர்கள் சிலர் அவரோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். அவர்கள் போனை வாங்கி செல்ஃபி எடுத்துக் கொண்ட ரியான், போனை அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் போது கையில் கொடுக்காமல் வீசினார். இதைப் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பராக்கைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.