புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (11:01 IST)

சிப் தட்டுப்பாட்டில் சிக்கிய கார் நிறுவனங்கள்! - லட்சக்கணக்கான கார் உற்பத்தி தேக்கம்!

இந்தியாவில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள சிப் தட்டுப்பாடு காரணமாக கார்கள் உற்பத்தி தேக்கம் அடைந்துள்ளது.
இந்தியாவில் பிரபல கார் நிறுவனங்களான மஹிந்திரா, சுசுகி, ஹூண்டாய் உள்ளிட்ட பல கார் நிறுவனங்கள் கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலம் கார்களை தயாரித்து வருகின்றன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கார்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள சிப் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் கார் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சிப் தட்டுப்பாட்டால் மாருதி நிறுவனம் சுமார் 3.40 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களிலும் 3 லட்சம் கார்கள் உற்பத்தி பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடு குறைந்து கார் உற்பத்தி பணிகள் முழுமையாக முடிய சுமார் 2 முதல் 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.