நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் 182 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி சிஎஸ்கேவை 176 ரன்களில் வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டனாக செயல்பட்ட ரியான் பராக், அணியின் தாமதமான பந்து வீச்சிற்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த 3 போட்டிகளாக கேப்டனாக செயல்பட்ட ரியான் பராக் அடுத்த போட்டியில் கேப்டனாக செயல்பட மாட்டார்.
சஞ்சு சாம்சன் இல்லாததால் ரியான் பராக் கேப்டனாக இருந்து வந்த நிலையில் அடுத்த போட்டி முதலாக சஞ்சு சாம்சனே கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். ஏற்கனவே ரியான் பராக் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தது, போட்டோ எடுக்க வந்தவர்களின் போனை தூக்கி போட்டது உள்ளிட்ட சர்ச்சைகளை ரியான் பராக் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K