1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 8 ஆகஸ்ட் 2018 (15:47 IST)

விரைவில் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வேன் - பி.வி.சிந்து நம்பிக்கை

கடுமையாக முயற்சி செய்து அடுத்தமுறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவேன் என இந்திய பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து கூறியுள்ளார். 



சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து–கரோலினா மரின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். ஆட்டம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் கரோலினா.
 
சிந்து கடுமையாக முயற்சி செய்தும் 21-19, 21-10 என்ற கணக்கில் கரோலினா சிந்துவை வீழ்த்தினார். இதன்மூலம் கரோலினார் தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். 

இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை சிந்து அடைந்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா திரும்பிய பிவி சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அடுத்த முறை இன்னும் கடுமையாக முயற்சிப்பேன். நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.