புரோ கபடி 2019: ஹரியானா, உபி அணிகள் வெற்றி!
புரோ கபடி போட்டிகள் கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய இரண்டு போட்டிகளில் ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் வெற்றிவாகை சூடின.
நேற்றைய முதல் போட்டியில் ஹரியானா அணி பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டி ஆரம்பம் முதல் இரு அணிகளுமே விறுவிறுப்பாக வெற்றியை நோக்கி விளையாடிய நிலையில், இரு அணிகளும் மாறி மாறி அதிக புள்ளிகள் எடுத்து வந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கடைசிவரை யூகிக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் இறுதியில் ஹரியானா அணியில் 36 புள்ளிகளும் பெங்கால் அணி 33 புள்ளிகளும் பெற்றதை அடுத்த மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா வெற்றி பெற்றது
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் உத்தரபிரதேச அணியுடன் புனே அணி மோதியது. இந்த போட்டியில் உத்தரபிரதேச 35 புள்ளிகளும் புனே அணி 30 புள்ளிகளும் பெற்றதை அடுத்து 5 புள்ளிகள் வித்தியாசத்தில் உத்தரபிரதேச வெற்றி பெற்றது
நேற்றைய போட்டிக்குப் பின்னர் டெல்லி, ஜெய்ப்பூர், மற்றும் பெங்கால் ஆகிய மூன்று அணிகள் முதல் மூன்று இடத்திலும், பெங்களூர், ஹரியானா மற்றும் மும்பை ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடத்திலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் 9-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது