புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் போராடி மீண்டும் தோல்வி!

Last Modified வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (22:36 IST)
புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பல போட்டிகளில் கடைசி நேரத்தில் வெற்றியை கோட்டைவிட்டு வரும் நிலையில் இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் அதிக புள்ளிகளை பெற்றிருந்தாலும் இறுதியில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது
இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 24 புள்ளிகளும், மும்பை அணி 29 புள்ளிகளும் பெற்றன. தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் கடைசி நேரத்தில் வெற்றிக்காக போராடியும் முடியவில்லை. தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரர் அஜய் தாக்கூர் இன்று ரைடில் மூன்று புள்ளிகள் மட்டுமே பெற்றார்.

அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் குஜராத் அணி, பாட்னா அணியை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. குஜராத் அணி 29 புள்ளிகளும், பாட்னா அணி 26 புள்ளிகளும் பெற்றன.
இன்றைய போட்டியின் முடிவில் ஜெய்ப்பூர், பெங்கால், டெல்லி ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களிலும், பெங்களூரு, ஹரியானா, குஜராத் ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடங்களீலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதால் 7வது இடத்தில் உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :