புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி

Last Modified வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (07:46 IST)
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் புரோ கபடி போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஜெய்ப்பூர் அணியுடன் மோதி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது
தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் என இரு அணிகளும் புள்ளிகளை மாறி மாறி எடுத்து முன்னணி வந்து கொண்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி கோட்டவிட்டதால் ஜெய்ப்பூர் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி 28 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி 26 புள்ளிகளும் எடுத்தன. தமிழ் தலைவாஸ் அணியின் அஜய்தாக்கூர் மற்றும் ராஹுல் செளத்ரி தலா 6 புள்ளிகளை ரெய்டில் எடுத்து கொடுத்தனர்
இதனையடுத்து நடைபெற்ற இன்னொரு போட்டியில் பெங்களூரு மற்றும் புனே அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த புனே அணி 31 புள்ளிகளும், பெங்களூரு அணி 23 புள்ளிகளும் பெற்றதையடுத்து புனே அணி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த நிலையில் புள்ளிகள் பட்டியலில் ஜெய்ப்பூர், டெல்லி, பெங்கால் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களிலும், பெங்களூரு, ஹரியானா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :