300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நான்காவது கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில்,ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தொடங்கியது. முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி அசத்தியுள்ளனர்.
அதில், சாம் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள் ரன்கள் அடித்துள்ளனர். ஸ்மித் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆஸ்திரேலிய அணி 86 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பந்துவீச்சை பொறுத்தவரை, பும்ரா மூன்று விக்கெட்டுகளை பெற்றுள்ளார். ஆகாஷ் தீப், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva