புரோ கபடி போட்டி: டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி

Last Modified ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (08:00 IST)
புரோ கபடி போட்டிகள் கடந்த 6 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடைசி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்று யூகிக்க முடியாத அளவில் இருந்தது. இருப்பினும் இறுதியில் சுதாரித்து விளையாடிய டெல்லி அணி 33 புள்ளிகளும், பெங்களூரு அணி 31 புள்ளிகளும் பெற்றதால் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணியின் நவீன்குமார் 7 புள்ளிகள் மூலம் பெற்றார் என்பதும், பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ப்ரவீன் குமார் 12 புள்ளிகளை தனது அணிகளுக்கு பெற்றுக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஜெய்ப்பூர் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டி ஆரம்பம் முதலே தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தாலும் ஜெய்ப்பூர் அணியும் ஈடுகொடுத்து விளையாடியது. இறுதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 24 புள்ளிகள் எடுத்து மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


நேற்றைய போட்டியில் ஜெய்ப்பூர் அணி தோல்வி அடைந்தாலும் 37 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. டெல்லி 34புள்ளிகளும், பெங்கால் அணி 33 புள்ளிகளும் பெற்று 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது மும்பை, பெங்களூரு, ஹரியானா ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடங்களிலும், தமிழ் தலைவாசல் எட்டாவது இடத்திலும் உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :