வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:52 IST)

மற்ற நாடுகளின் வாரியங்களின் மீது பிசிசிஐக்கு அக்கறை உண்டு – கங்குலி!

இங்கிலாந்தில் நடக்க இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து பிசிசிஐயின் தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிசியோதெரபி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும் இருநாட்டு கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் ஆலோசனை செய்து இந்த போட்டியை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்து உள்ளனர்.

இந்திய வீரர்களால் ஒரு அணியைக் களமிறக்க முடியவில்லை என்பதால்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்து இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘வீரர்கள் 5-வது டெஸ்ட் போட்டியில்  அச்சத்தில் விளையாட மறுத்துவிட்டனர். அவர்களை பற்றி குறை சொல்லவும் முடியாது. போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு ஐபிஎல் தொடர் காரணம் இல்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம். மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் மேல் பிசிசிஐக்கு எப்போதும் அக்கறை உண்டு’ எனக் கூறியுள்ளார்.